லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்: போலீஸ்காரர் படுகாயம்
ஆவடி அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
பூந்தமல்லி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் டேவிட் (வயது 29). போலீஸ்காரரான இவர், அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் டேவிட், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story