அத்திப்பட்டில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை - தென்னக ரெயில்வே மண்டல மேலாளர் தகவல்
அத்திப்பட்டில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே மண்டல மேலாளர் தெரிவித்தார்.
பொன்னேரி,
பொன்னேரி ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் குறைகள் கேட்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று தென்னக ரெயில்வே சென்னை கோட்ட மண்டல மேலாளர் கணேஷ், கூடுதல் மண்டல மேலாளர் ஆனந்தன், வணிக மேலாளர் செல்லம், உதவி கோட்ட இயக்க மேலாளர் சிவாஜிஅங்கோரோ, முதுநிலை கோட்ட வணிக மேலாளர் வைஜெயந்திமாலா மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது அத்திப்பட்டு முதுநிலை ஊராட்சி துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் அத்திப்பட்டு ரெயில்வே மேம்பாலத்தை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் பாலத்தின் வழியாக செல்ல வேண்டும். அதனால் நோயாளிகள், முதியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் பொதுமக்களின் நலன் கருதி ரெயில்வே இருப்பு பாதையின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கோரிக்கை மனுவை கோட்ட மண்டல மேலாளர் கணேஷிடம் வழங்கினார். அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ரெயில் பயணிகள் சங்கத்தினர் அத்திப்பட்டு ரெயில் நிலையம் மூலம் கும்மிடிப்பூண்டி வரை 4 வழி பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story