மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீரென ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீரென ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அலுவலக வளாகம் குப்பை கூளமாக காட்சி அளித்தது. உடனடியாக நகராட்சி அலுவலர்களை வரவழைத்து ஒட்டு மொத்த தூய்மை பணி மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர் துப்புரவு பணியாளர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை அவர் பார்வையிட்டார்.
மேலும் அந்த வளாகத்தில் கருவூல அலுவலகம் முதல் பத்திரப்பதிவு அலுவலகம் வரை மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதாக வந்த புகாரை அடுத்து அவர் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் அந்த பகுதியில் சாலையை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
மேலும் தாலுகா அலுவலகத்தை பார்வையிட்ட அவர் அலுவலகத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும், முக்கியமான ஆவணங்களை ஆவண காப்பகத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர் ரேவதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட், வினோத்கண்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story