திருக்கழுக்குன்றம் அருகே நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது


திருக்கழுக்குன்றம் அருகே நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2021 6:41 PM IST (Updated: 20 Aug 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள கொத்திமங்கலம் விக்னேஸ்வரர் நகரை சேர்ந்தவர் பத்மனாபன். ரத்த பரிசோதனை மையம் நடந்தி வருகிறார். இவரது மனைவி பூமலர் (வயது 45). இவர் பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவர் அணிந்திருந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து பூமலர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களில் ஒருவர் தப்பிச்சென்று விட்டார். மற்றொருவரை பிடித்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் அவரது பெயர் ராஜி என்ற ராஜேஷ் (27) என்பதும் செங்கல்பட்டு அடுத்த பரனூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் பால் வாங்க சென்ற பூமலரிடம் இருந்து நகை பறித்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 11 பவுன் நகை மீட்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் மீது பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story