இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து போராட்டம்
குடியாத்தத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை திறந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் சாய்ஆனந்த் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பி.பிரபாகரன் , நகர பொதுச் செயலாளர் எம்.பி.மகேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அவர்களிடம் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் மற்றும் நேர்முக உதவியாளர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்போது இந்து முன்னணியினர் கோவில்களை திறந்து பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் பிற மத வழிபாட்டுத் தலங்கள் திறந்திருக்கிறது. அதுபோல் கோவில்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்து முன்னணியினர் கோரிக்கைகளை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் தனஞ்செயன் உறுதி அளித்தார்.
இதனையடுத்து இந்துமுன்னணியினர் கலைந்து சென்றனர். குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், முருகன் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்,
Related Tags :
Next Story