நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 144 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 58 பேர் நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த ஆண்டில் மொத்தம் 36 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மொத்தம் 239 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவர். குற்றங்களை தடுக்கவும், கண்டறியும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் மாமூல் கேட்டு துன்புறுத்துவது, நில அபகரிப்பு போன்ற விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைமறைவாக இருந்து வரும் மற்ற ரவுடிகளையும் பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story