வைகை அணை ஆரம்ப சுகாதார நிலைய கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு
வைகை அணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீரென வருகை தந்து தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் முக கவசம் அணிந்து இருந்தார்களா? சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். முன்னதாக குள்ளப்புரம் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் இருப்பு விவரங்களை பார்வையிட்டதோடு, பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story