வெங்காயம் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
உப்புக்கோட்டை பகுதியில் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உப்புக்கோட்டை:
கம்பம் பள்ளத்தாக்கு கடைமடையான உப்புக்கோட்டை, கூழையனூர் பகுதியில் அதிகளவு வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. போதிய பாசன வசதி மற்றும் நோய்தாக்குதல் இல்லாததால் இந்த பகுதியில் வெங்காயம் நன்கு விளைச்சல் அடைந்து இருந்தது.
இந்தநிலையில் உற்பத்தி அதிகரிப்பால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து வெங்காயம் சாகுபடி செய்த விவசாயி ஒருவர் கூறுகையில், ஒரு ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்ய ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் வியாபாரிகள் எங்களிடம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை எங்களுக்கு கட்டுப்படியாக வில்லை என்றார்.
Related Tags :
Next Story