மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2021 9:28 PM IST (Updated: 20 Aug 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஆற்காடு

ஆற்காடு அருகே மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 57), கூலித்தொழிலாளி. 

இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் இன்று காலை மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு புதுப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பூங்காவனம் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story