மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் பரிதாப சாவு


மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் பரிதாப சாவு
x
தினத்தந்தி 20 Aug 2021 9:47 PM IST (Updated: 20 Aug 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக சென்னையிலிருந்து வந்த இளம்பெண் காதலனின் உறவினர் வீட்டு மொட்டை மாடியில் செல்போன் பேசியபோது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக சென்னையிலிருந்து வந்த இளம்பெண் காதலனின் உறவினர் வீட்டு மொட்டை மாடியில் செல்போன் பேசியபோது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கூலி தொழில்

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 21), சென்னையில் கூலி தொழில் செய்து வருகின்றார். 

இவரும் சென்னை கண்ணகி நகர் எழில் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரிதா (18) என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். 

சரிதா பிளஸ்- 2 முடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக கூறி சரிதாவை மாதேஸ்வரன் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் சரிதாவை திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்து உள்ளார். 

போலீசில் புகார்

இதற்கிடையில் சரிதாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் சென்னை கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். கண்ணகி நகர் போலீசாரும் சரிதாவை தேடி வந்து உள்ளனர்.

இந்த நிலையில் சரிதா நேற்று மாலையில் அவர் தங்கி இருந்து வீட்டின் மொட்டை மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென அவர் கால் தவறி மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலனிடம் விசாரணை

தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இது குறித்து சரிதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து மாதேஸ்வரனையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story