பாதாள செம்பு முருகன் கோவில் கும்பாபிஷேகம்
ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தை அடுத்த ராமலிங்கம்பட்டி போகர்நகரில் பழமையான பாதாள செம்பு முருகன், மகாகணபதி, ஆதிசிவன், பாலபைரவர், சங்கிலி கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, விக்ரகங்களுக்கு கண்திறப்பு, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணிக்கு கோவில் கோபுரத்துக்கும், பின்னர் மகாகணபதி, ஆதிசிவன், காலபைரவர், கருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கும், 7 மணிக்கு பாதாள செம்பு முருகனுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, காமாட்சிபுரம் ஊராட்சி தலைவர் கணேஷ்பிரபு, ஒன்றிய கவுன்சிலர் காளீஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்திற்கு வந்தவர்களை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் அறிவழகன் வரவேற்றார்.
Related Tags :
Next Story