சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்


சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Aug 2021 10:06 PM IST (Updated: 20 Aug 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

பழனி சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், தாராபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடக்க இருந்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பழனி:  

பழனியை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், தாராபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். 


அதில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தி, மணமக்களின் பெற்றோரை அழைத்து பெண்ணுக்கு திருமண வயது பூர்த்தியடையும் முன்பு திருமணம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கினர். 

Next Story