மேலும் 80 பேருக்கு கொரோனா


மேலும் 80 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Aug 2021 10:16 PM IST (Updated: 20 Aug 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர். 
80 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 1,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
5 பேர் பலி 
இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 528-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 98 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 757-ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 863 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 908-ஆக உயர்ந்துள்ளது. 

Next Story