காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வகையான பரிசோதனை
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வகையான பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வகையான பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு
திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இங்கு பனியன், கறிக்கோழி, எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழில்கள் இருந்து வருகிறது. இதனால் இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும் அதிகமாக இருந்தது.
இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பும் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு 3 வகையான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3 வகையான பரிசோதனை
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், நகர் நல மையம் மற்றும் மருத்துவமனைக்கு வருகிறவர்களுக்கு ரத்தமாதிரி சேகரித்து கொரோனா மற்றும் டெங்கு, மலேரியா பாதிப்பு ஆகிய 3 வகையான பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த பரிசோதனை முடிவுகள் வந்ததும், அவரது பகுதிகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்பதை கண்டறிய சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
இதுபோல் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றவர்கள் விவரங்களை சேகரித்து, வீடுகளுக்கு சென்று நலமாக உள்ளனரா? என்பதையும் விசாரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story