கேரளாவுக்கு 150 டன் பூக்கள் ஏற்றுமதி


கேரளாவுக்கு 150 டன் பூக்கள் ஏற்றுமதி
x
தினத்தந்தி 20 Aug 2021 10:27 PM IST (Updated: 20 Aug 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவுக்கு 150 டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

திண்டுக்கல்: 

கேரள மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகை நாளில் வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, பல்வேறு வகையான உணவு சமைத்து கொண்டாடுவார்கள். அதன்படி இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) ஓணம் பண்டிகை அங்கு கொண்டாடப்படுகிறது. பொதுவாக, ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் பூக்கள் ஏற்றுமதியாவது வழக்கம். 

அதன்படி திண்டுக்கல்லில் இருந்து மல்லிகை, ரோஜா, வாடாமல்லி, செண்டுமல்லி, அரளி உள்பட பல்வேறு வகையான தலா 15 டன் பூக்கள் கடந்த 10 நாட்களாக நாள்தோறும் ஏற்றுமதியானது. 



அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவுக்கு இதுவரை சுமார் 150 டன் பூக்கள் ஏற்றுமதியானது குறிப்பிடத்தக்கது. மார்க்கெட்டில் (விலை கிலோவில்) மல்லிகை ரூ.1,400, கனகாம்பரம் ரூ.500, முல்லை ரூ.700, ஜாதிப்பூ ரூ.400, ரோஜா ரூ.150, செண்டுமல்லி ரூ.70, வாடாமல்லி ரூ.180, அரளி ரூ.150, சம்பங்கி ரூ.130, கோழிக்கொண்டை ரூ.80-க்கு நேற்று விற்பனை ஆனது.


Next Story