கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை


கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2021 11:03 PM IST (Updated: 20 Aug 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி. கால்வாயையொட்டி உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

பொள்ளாச்சி

பி.ஏ.பி. கால்வாயையொட்டி உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். 

அதிகாரிகள் ஆய்வு 

பி.ஏ.பி. பாசன திட்டத்தில் 4-வது மண்டலத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பிரதான கால்வாயில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதன் காரணமாக கால்வாயையொட்டி உள்ள தோட்டங்களில் இருக்கும் கிணறுகளில் தண்ணீர் உயர்ந்து உள்ளன. 

இதை பயன்டுத்தி சிலர் தண்ணீரை எடுத்து விற்பனை செய்வ தாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவின் பேரில் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி மேற்பார்வையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ராஜன், தீனதாயா ளன், மண்டல துணை தாசில்தார்கள் சரவணன், அனுசியா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

குழாய் அகற்றம் 

அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேடு பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். 

அதுபோன்று நெகமம் அருகே ஆவல்சின்னாம்பாளையத்தில் தண்ணீர் திருடுவதற்கு அமைக்கப்பட்டு இருந்த குழாய் அகற்றப் பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை 

பி.ஏ.பி. கால்வாயையொட்டி உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதால் கால்வாயில் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் உரிய அனுமதி பெறாமல் தண்ணீர் எடுத்தது தெரியவந்தது. 

எனவே கால்வாயையொட்டி உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதையும் மீறி தண்ணீர் எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story