பரங்கிப்பேட்டை அருகே தூக்கில் பிணமாக தொங்கிய பெண் போலீஸ் விசாரணை


பரங்கிப்பேட்டை அருகே தூக்கில் பிணமாக தொங்கிய பெண் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Aug 2021 11:06 PM IST (Updated: 20 Aug 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அருகே பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் குட்டியாண்டவர் கோவில் புஷ்பகாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி  கவிதா  (வயது 45). நேற்று இவரது உறவினர் ஒருவரது வீட்டு வளையல் அணிவிழா அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கவிதா கலந்து கொண்டு பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் கவிதா, அவரது வீட்டில் புடவையால் தூக்கில் பிணமாக  தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து  பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து, கவிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். 
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story