கொரோனா பரவல் காரணமாக பூக்கள் விற்பனை மந்தம்
ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது.
பொள்ளாச்சி
ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது.
ஓணம் பண்டிகை
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை யொட்டி வகை, வகையாக பூக்களை வாங்கி வீடுகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கோலமிட்டு மகிழ்வார்கள்.
இதேபோன்று பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். இதனால் பொள்ளாச்சிக்கு வெளியூர்களில் இருந்து பூக்கள் வரத்து அதிகமாக இருக்கும். பூக்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெறும்.
பூக்கள் விற்பனை மந்தம்
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பொள்ளாச்சி யில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சியில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பூக்கள் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
மல்லிகை ரூ-.800 முதல் ரூ.1300 வரை, சம்பங்கி ரூ.120 முதல் ரூ.200, செண்டுமல்லி ரூ.80 முதல் ரூ.100, கோழிக்கொண்டை ரூ.60 முதல் ரூ.80, அரளி ரூ.160 முதல் ரூ.200, வாடாமல்லி ரூ-.170 முதல் ரூ.200, சில்லிரோஸ் ரூ.80 முதல் ரூ.100, முல்லை ரூ.400 முதல் ரூ.500, ஜாதிப்பூ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
விலை அதிகரிப்பு
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தேனி, திண்டுக்கல், நிலக் கோட்டை, ஒசூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளா மாநிலம் திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம், ஆலுவா, சாலக்குடி, கொல்லங்கோடு, நெம்மாரா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வழக்கமாக ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு 7 மணி வரை பூக்கள் விற்பனை இருக்கும். ஆனால் கொரோனா காரணமாக விற்பனை குறைந்தது. மேலும் பூக்கள் வரத்து குறைவால் விலை உயர்ந்து இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story