பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவர் கைது
பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
வரவேற்பாளர் பணி
அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற விசுவநாதன் (வயது 34) என்பவர் சுபநிகழ்ச்சிகளில் வரவேற்பாளர் வேலைக்கு காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் பெண்களை வேலைக்கு சேர்த்துள்ளார். வேலைக்கு வந்த பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறியும், மிரட்டியும் இந்த பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்.
இவரது செயல்களுக்கு போலீஸ் ஏட்டு ஒருவரும் சில பெண்களும் உடந்தையாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பல பெண்கள் ராஜாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஒருவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த அந்த பெண் சுபநிகழ்ச்சியொன்றில் வரவேற்பாளர் வேலைக்காக ராஜா அழைத்ததின் பேரில் புதுவயல் வந்துள்ளார். அங்கு வேலை முடிந்தவுடன் புதுவயலில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டார் என்றும், அங்கு வேலைக்கு வந்த மற்ற தோழிகளுடன் தங்கியிருந்ததாகவும் அப்போது ராஜா தன்னிடம் முறைகேடான செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் அவ்வாறான செயல்களுக்கு தன்னை தூண்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.
கைது
இதையடுத்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அறந்தாங்கியை சேர்ந்த ராஜா என்ற விஸ்வநாதனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் ராஜாவிற்கு உடந்தையாக இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story