ஆடுகள் திருடிய 2 பேர் கைது
ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள தோக்கநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி மகன் போஸ் (வயது56).சாத்தணி கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு கட்டிஇருந்த வெள்ளாடுகளை 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரகுநாதன் (52). இவருடைய 2 ஆடுகளும் திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் கறிக்கடையில் ஆடுகளை விற்க முயன்றபோது இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், பூச்சியநேந்தல் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் முத்துப்பாண்டி (24), கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை இளையான்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story