வியாபாரி வங்கி கணக்கில் ரூ.8,500 அபேஸ்
காய்கறி வாங்குவது போல் நடித்து வியாபாரி வங்கி கணக்கில் ரூ.8,500 அபேஸ் செய்த மோசடி பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊட்டி
காய்கறி வாங்குவது போல் நடித்து வியாபாரி வங்கி கணக்கில் ரூ.8,500 அபேஸ் செய்த மோசடி பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காய்கறிகள் பட்டியல்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ராஜ்குமார்(வயது 50) என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவரை நேற்று முன்தினம் செல்போனில் பெண் ஒருவர் தொடர்பு கொண்டார்.
பின்னர் ராணுவத்தில் இருந்து பேசுவதாகவும், காய்கறிகள் வேண்டும் என்றும் கேட்டார். உடனே அதற்கான பட்டியலை அனுப்பி வைக்குமாறு ராஜ்குமார் கேட்டார். தொடர்ந்து அந்த பெண் வாட்ஸ்-அப் மூலம் பட்டியலை அனுப்பினார்.
ரகசிய எண்
இதையடுத்து காய்கறிகளை பேக்கிங் செய்த பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ராஜ்குமார் ரூ.4,300 செலுத்துமாறு தெரிவித்தார். அதற்கு ஏ.டி.எம். கார்டு மூலம் செலுத்துகிறேன் என்று அந்த பெண் கூறினார். மேலும் உங்களது ஏ.டி.எம். கார்டை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்று கேட்டார்.
அதன்படி தனது ஏ.டி.எம். கார்டை புகைப்படம் எடுத்து ராஜ்குமார் அனுப்பினார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வந்த ரசகிய எண்ணை அந்த பெண் கேட்டு வாங்கியபிறகு உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டார்.
விசாரணை
தொடர்ந்து ராஜ்குமாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8,500-ஐ அந்த பெண் அபேஸ் செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அந்த பெண் முதலில் கூகுள் பே மூலம் பணம் அனுப்ப மறுத்து, ஏ.டி.எம். கார்டை புகைப்படும் எடுத்து அனுப்புமாறு தெரிவித்து உள்ளார். எதிர்முனையில் பேசிய பெண் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பேசினார். செல்போன் எண்ணை கொண்டு அவரை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story