ரூ.1 கோடியே 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ரூ.1 கோடியே 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:49 PM IST (Updated: 20 Aug 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடியே 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

மூலனூர்
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடியே 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
பருத்தி ஏலம்
திருப்பூர் மாவட்டம் மூலனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மறைமுகமாக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் கரூர், திருச்சி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம், கள்ளிமந்தயம், ஒட்டன்சத்திரம், கரூர், அரவக்குறிச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 386-விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.  இதை கொள்முதல் செய்வதற்கு மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி, உடுமலை, கோவை, புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 21 வியாபாரிகள் வந்து கலந்து கொண்டனர்.
ரூ.1½ கோடி
 இதில் வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8209-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,200-க்கும் சராசரி விலை ரூ.7550-க்கும் விலை போனது. அந்த வகையில் இந்த வாரம் மொத்தம் 4352 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 794ஆகும் இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார். 

Next Story