அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று மேலும் 8 பேர் தற்கொலை முயற்சி
திருச்சி சிறப்பு முகாமில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று மேலும் 8 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கே.கே.நகர், ஆக.21-
திருச்சி சிறப்பு முகாமில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று மேலும் 8 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சிறப்பு முகாம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்றவழக்குகளில் தொடர்புடைய இலங்கை, நைஜீரியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அகதிகள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களிடம் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இன்னும் 3 வாரத்தில் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறியதாக தெரிகிறது.
ஆனால் விடுதலைக்கான எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில் நிரூபன், முகுந்தன் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். ஆனாலும் எவ்வித தீர்வும் எட்டப்படாததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமல்ராஜ், ரமணன் ஆகிய 2 பேர் கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றை கிழித்துக்கொண்டும், 14 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
கவலைக்கிடம்
சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உணவு உண்ண மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 10-வது நாளாக முகாமில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த நிரூபன், முகுந்தன் ஆகியோர் உடல்நிலை மருத்துவக் குழுவினரால் நேற்று சோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களின் இதயத்துடிப்பு குறைந்து வரும் நிலையில் இருவரும் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டது. கவலைக்கிடமான இருவரையும் மருத்துவ குழுவினர் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.
அதையடுத்து காவல்துறை உதவியுடன் இருவரும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
8 பேர் தற்கொலை முயற்சி
இந்த நிலையில் நேற்று சிறப்பு முகாமில் மேலும் 8 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். உடனே அவர்களையும் அதிகாரிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சிறப்பு முகாமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story