ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது


ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2021 12:05 AM IST (Updated: 21 Aug 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது

திருவெறும்பூர்,ஆக.21-
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது 50). இவர் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7-ந்தேதி சாலையோர கடையில் கொய்யாப்பழம் வங்கி கொண்டிருந்தபோது, மர்மநபர்கள்  அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர் இந்நிலையில் நேற்று திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் வேங்கூர் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்த பகதூர்ஷாவின் மகன் பாதுஷா (24), மிலிட்டரி காலனி சுலைமானின் மகன் சிக்கந்தர் பாஷா (25) ஆகியோரை பிடித்து விசாரித்த போது, ஆசிரியை பஞ்சவர்ணத்திடம் தங்க சங்கிலி பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் திருவெறும்பூர் பகுதிகளில் 4 ஆடுகளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நகை-ஆடுகளை மீட்டனர்.

Next Story