தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
விக்கிரமசிங்கபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 43), கூலி தொழிலாளி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 18-ந் தேதி அவரது வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதியினர் விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டிற்குள் கதிர்வேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story