சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது


சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2021 12:54 AM IST (Updated: 21 Aug 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கடையம்:

கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலுக்கு செல்லும் நுழைவுவாயில் மாதாபுரத்தில் உள்ளது. இந்த நுழைவுவாயிலுக்கு அருகில் உண்டியல் உள்ளது. அதன் அருகே முருகன் சிலை ஒன்று இருந்தது. அந்த சிலையை மர்மநபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

நேற்று காலையில் அதனை பார்த்த பொதுமக்கள் கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த ராமையா மகன் சிவக்குமார் (வயது 31) என்பவர் மதுபோதையில் சிலையை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Next Story