கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
சங்கரன்கோவில் அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் புகுந்து ரூ.7 லட்சம் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் புகுந்து ரூ.7 லட்சம் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கட்டிட காண்டிராக்டர்
சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது 45). கட்டிட காண்டிராக்டர். இவரது வீடு சங்கரன்கோவில்- புளியங்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.
சம்பவத்தன்று இவர் வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க காம்பவுண்டு சுவர் வழியாக ஏறி குதித்த மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
20 பவுன் நகை கொள்ளை
பீரோவை திறந்து உள்ளே இருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், மோதிரங்கள், கொலுசு உள்ளிட்ட 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த பாக்கியசாமி, பீரோ திறந்து கிடந்ததும், அதில் இருந்த நகைகள் கொள்ளை போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசில் பாக்கியசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சங்கரன்கோவில் பகுதியில் அடிக்கடி நடக்கும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story