பூத்துக்குலுங்கும் காட்டுமல்லி
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு ெதாடர்ச்சி மலை பகுதிகளில் அதிக அளவு காட்டுமல்லி பூத்துக்குலுங்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு ெதாடர்ச்சி மலை பகுதிகளில் அதிக அளவு காட்டுமல்லி பூத்துக்குலுங்குகிறது.
மூலிகை செடி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு உள்ளது. இதன்அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான மூலிகைசெடிகளும், நூற்றாண்டை கடந்த அரியவகை மரங்களும், பல்வேறு வகையான நோய்களை குணமாக்கக் கூடிய அற்புத தாவரங்களும் அதிக அளவில் வளர்ந்து உள்ளன.
அதேபோல அதிக அளவு வனப்பகுதியில் மட்டுமே முளைக்கும் பல்வேறு மலர்களும் இந்த பகுதியில் அதிக அளவு உள்ளன. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு இடங்களில் தற்போது காட்டு மல்லிகை அதிகளவு பூத்துக்குலுங்கிறது.
காட்டுமல்லி
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் எண்ணற்ற தாவரங்கள் செழித்து வளர்த்துள்ளன. அதிலும் குறிப்பாக செண்பகத்தோப்பு அடிவார பகுதிகளில் காட்டுமல்லி வழக்கத்தை விட இந்த முறை அதிக அளவில் பூத்துள்ளது.
வனப்பகுதியில் காற்று வீசும் போது காட்டு மல்லியின் மனம் பல கிலோ மீட்டர் தூரம் வீசுகிறது. இந்த மல்லிகை பார்க்காக அழகாக இருக்கும். நல்ல வாசனை இருக்கும். ஆனால் இதனை மக்கள் பயன்படுத்த முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story