மாவட்ட செய்திகள்

விபத்தில் தொழிலாளி பலி + "||" + Worker killed in accident

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி
சங்கரன்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள வாடிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பட்டுகண்ணன் (வயது 50). இவர் தனது உறவினரான தொழிலாளி மாடசாமி, பவானி ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். 

வாடிக்கோட்டை விலக்கு அருகே வந்த போது, எதிரே ஒரு மினி பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மினி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டது. இதில் பட்டுகண்ணன், பவானி ஆகியோர் லேசான காயமும், மாடசாமி பலத்த காயமும் அடைந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த மாடசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கூலித்தொழிலாளி விபத்தில் பலி
கூலித்தொழிலாளி விபத்தில் பலியானார்.
2. பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி
பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி ஆனார்.
3. விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு
கயத்தாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விருந்துக்கு சென்று திரும்பிய புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
4. விபத்தில் தொழிலாளி சாவு
சங்கரன்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
5. குருவிகுளம் அருகே விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு
குருவிகுளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.