வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள் ஏமாற்றம்
கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்கவும், பக்தர்கள் வழிபடவும் மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சிவகாசி,
கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்கவும், பக்தர்கள் வழிபடவும் மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பக்தர்களுக்கு தடை
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் பலர் கோவில்களில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து இருந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் அனுமதி திடீர் தடை விதிக்கப்பட்டதால் அந்த திருமணங்கள் வீடுகளிலும், மண்டபங்களிலும் அரசு விதிப்படி நடைபெற்றது.
வரலட்சுமி விரதம்
இதேபோல் நேற்று தமிழகம் முழுவதும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்பட்டது. இந்த திருநாளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதற்காக பெண்கள் விரதம் இருந்து கலந்து கொள்வார்கள்.
ஆனால் நேற்று கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால் கோவில்களின் வெளியே நின்று தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு களை இழந்து காணப்பட்டது.
இதனால் பெண் பக்தர்கள் தங்கள் வீடுகளில் வரலட்சுமி விரதத்தை கொண்டாடினர். சிவகாசியில் பல அம்மன்கோவில்களில் நுழைவு வாயிலில் விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. சிறிய அளவிலான கோவில்களில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு கீழ ரத வீதி மாரியம்மன் கோவிலில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வரலட்சுமி பூஜை நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதை தொடர்ந்து 10 ஆயிரம் வளையல்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வாசலில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தளவாய்புரம் அருகே உள்ள கொமந்தாபுரம் வன காளியம்மன், தளவாய்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூைஜ நடந்தது.
Related Tags :
Next Story