புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 Aug 2021 1:39 AM IST (Updated: 21 Aug 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 15 பேரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 67 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 199 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 247 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 751 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 374 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,189 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story