அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி
களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் நிலைதடுமாறி விழுந்ததில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் நிலைதடுமாறி விழுந்ததில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவர்கள்
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மஞ்சாடி பகுதியைச் சேர்ந்தவர் சசி. ஆட்டோ டிரைவர். இவருக்கு ஷாஜின் (வயது 18) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். ஷாஜின் பிளஸ்-2 முடித்துள்ளார். மகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை ஷாஜின் கொல்லங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர், கொல்லங்ேகாடு கச்சேரிநடையை சேர்ந்த இஸ்ரவேல் மகன் பெர்லின் குமார் (15) என்பவரை அழைத்துக் கொண்டு இருவரும் மஞ்சாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். பெர்லின் குமார் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
2 பேர் சாவு
களியக்காவிளை போலீஸ் நிலையத்தை அடுத்த ஒற்றாமரம் பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை ஷாஜின் மோட்டார் சைக்கிளில் முந்திச் செல்ல முயன்றார். அப்போது, அதே பகுதிைய சேர்ந்த நசீர் என்பவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ஷாஜினின் மோட்டார் சைக்கிள் மோதியது. மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஷாஜின், பெர்லின்குமார் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது பின்னால் வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஷாஜின், பெர்லின் குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதே சமயத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நசீருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சமூக வலைதளத்தில்...
இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே இந்த விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சகோதரிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story