பணம் கொடுக்கல், வாங்கல் புகார் மனு பெறப்படாது
பணம் கொடுக்கல், வாங்கல் புகார் மனு பெறப்படாது
திருவட்டார்,
சொத்து மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமான வழக்குகள் குறித்த மனுக்கள் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் இனி பெறப்பட மாட்டாது என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறுகளில் யார் உண்மை சொல்கிறார் என கண்டறிய முடிவது இல்லை. விசாரிக்கும்போது பிரச்சினை வளர்ந்து கொண்டே போகிறது. இதேபோல், சொத்து சம்பந்தமான வழக்குகளிலும் யார் சொல்வது சரி, தவறு என கண்டு பிடிப்பதும் போலீசாரின் வேலை இல்லை. மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்தை நடத்துவதால் ேபாலீஸ் நிலையத்தில் வழக்கமான பணிகளில் தடங்கல் ஏற்படுகிறது. இதையடுத்து தக்கலை துணை சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் சொத்து மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பான புகார் மனுக்களை பெற்று கொள்ள வேண்டாம் என திருவட்டார் போலீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக மனுதாரர்கள் கோர்ட்டு சென்று நிவாரணம் தேடிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்” என்றனர்.
Related Tags :
Next Story