கள்ளக்காதலி பேச மறுத்ததால் ஆத்திரம் அம்மன் கோவிலில் சிலைகள் உடைப்பு வாலிபர் கைது


கள்ளக்காதலி பேச மறுத்ததால் ஆத்திரம் அம்மன் கோவிலில் சிலைகள் உடைப்பு வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2021 2:43 AM IST (Updated: 21 Aug 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஆத்துக்காட்டில் கள்ளக்காதலி பேச மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர், அம்மன் கோவிலில் நவக்கிரக சிலைகளை உடைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னங்குறிச்சி
சிலைகள் உடைப்பு
சேலம் ஆத்துக்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் கோவில் திறக்கப்படாமல் உள்ளது. நேற்று இரவு மர்மநபர் ஒருவர் கோவிலின் முன்புறம் உள்ள நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதில் 3 சிலைகள் சேதம் அடைந்து விட்டன. அதன்பிறகு அங்கிருந்து அந்த நபர் தப்பிசென்றார்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதவி கமிஷனர் ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
வாலிபர் கைது
இதற்கிடையே சிலைகளை உடைத்ததாக சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சங்கர் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
கூலி வேலை செய்து வந்த நான், ஆத்துக்காட்டில் உள்ள கள்ளக்காதலியை பார்க்க சென்றேன். அப்போது மதுபோதையில் இருந்ததால் என்னுடைய கள்ளக்காதலி பேச மறுத்து விட்டாள்.
இதனால் வேதனை அடைந்த நான், கோவிலில் சாமி கும்பிட வந்தேன். அப்போது கள்ளக்காதலி என்னிடம் பேச மறுத்து விட்டாளே என மதுபோதையில் ஆத்திரம் அடைந்த நான் சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.
கோவிலில் நவக்கிரக சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story