கருப்பூரில் குடும்ப வறுமையால் பரிதாபம் பிளஸ்-2 மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செல்போனுக்கு ‘ரீசார்ஜ்’ செய்ய முடியாததால் விபரீத முடிவு
கருப்பூரில் பிளஸ்-2 மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப வறுமையால் செல்போனுக்கு பெற்றோர் ‘ரீசார்ஜ்’ செய்ய முடியாததால் இந்த விபரீதை முடிவை தேடிக்கொண்டார்.
கருப்பூர்,
பிளஸ்-2 மாணவர்
சேலம் கருப்பூர் கணக்கர் தெரு பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி ரகு. இவருடைய மகன் ஜெயசெல்வன் (வயது 17), இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். தற்போது ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் படித்துக் கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று செல்போனில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத வகையில் செல்போன் ரீசார்ஜ் செய்யப்படாமல் இருந்ததாக தெரிகிறது. குடும்ப வறுமையின் காரணமாக அவருடைய பெற்றோர் ஓரிரு நாளில் செல்போன் ரீசார்ஜ் செய்வதாக கூறியுள்ளனர்.
தற்கொலை
ஆனாலும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் ஜெயசெல்வன் வேதனை அடைந்தார். கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே நேற்று காலை கருப்பூர் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் ஒருவர் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்த போது கிணற்றில் பிணமாக மிதந்தது ஜெயசெல்வன் என்பது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை
உடனே போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஜெயசெல்வன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குடும்ப வறுமையால் செல்போனுக்கு பெற்றோர் ரீசார்ஜ் செய்ய முடியாததால் மனம் உடைந்த ஜெயசெல்வன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
Related Tags :
Next Story