சேலம் மாவட்டத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்  புதிதாக 85 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Aug 2021 2:43 AM IST (Updated: 21 Aug 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சேலம்
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 94 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று புதிதாக 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 17 பேர், எடப்பாடி, சங்ககிரியில் தலா 5 பேர், வீரபாண்டியில் 9 பேர், சேலம் ஒன்றியம், மேட்டூர் நகராட்சி, மகுடஞ்சாவடியில் தலா 3 பேர், மேச்சேரியில் 2 பேர், தாரமங்கலம், நங்கவள்ளி, ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, வாழப்பாடியில் தலா ஒருவரும் மற்றும் நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, காஞ்சீபுரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கோவை, கடலூர், கரூர், சென்னை மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 32 பேர் என மொத்தம் நேற்று 85 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
95,352 பேர் பாதிப்பு
இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 64 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மேலும், 1,088 பேர் தொடர்ந்து நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story