11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதை காண முடிகிறது. இந்த சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story