மோட்டார்சைக்கிள் மீது கார் உரசியதை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அடி-உதை
திருமுல்லைவாயல் சாந்தி நகரை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 52). நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரரான இவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 9-ந் தேதி முதல் மருத்துவ விடுப்பில் உள்ளார்.
இவர், திருவள்ளூரில் இருந்து திருமுல்லைவாயல் நோக்கி மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். ஆவடி அருகே வந்தபோது பின்னால் வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதனால் நிலைதடுமாறி கீழேவிழுந்த பரத்குமார், காரில் வந்த 2 பேரிடம் இதுபற்றி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் போலீஸ்காரர் பரத்குமாரை சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு காரில் தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story