ரெயில்வே இடத்தை காலி செய்ய எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
ரெயில்வே இடத்தை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நோட்டீஸ்
சென்னை வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் அருகே உள்ள கொல்லாபுரி நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி, ரெயில்வேக்கு சொந்தமான இடம் என்று கூறி, அந்த இடத்தை காலி செய்யும்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சாலை மறியல்
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி பொதுமக்கள், பல ஆண்டுகளாக வசித்த பகுதியில் இருந்து வெளியேற மறுத்து, நேற்று காலை பேசின் பிரிட்ஜ் மூலக்கொத்தளம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் மற்றும் தி.மு.க. பகுதி செயலாளர் சுரேஷ் ஆகயோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story