மாற்றுத்திறனாளியின் உதவித்தொகையை மோசடி செய்த ஏஜெண்டு கைது
சென்னை போரூர் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 39). மாற்றுத்திறனாளியான இவருக்கு தமிழக அரசு சார்பில் மாதம் தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இவர், போரூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், போரூரில் உள்ள வங்கியில் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் ஏஜெண்டாக பணியாற்றி வரும் கோவூரை சேர்ந்த ரமேஷ்ஆனந்த் (40), அரசு சார்பில் எனக்கு வழங்கிய உதவித்தொகை எனக்கு வரவில்லை என்று கூறி ஏமாற்றி, 38 மாதங்களாக வந்த உதவித்தொகையை அவரே எடுத்து மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார்.
இது குறித்து போரூர் போலீசார் ரமேஷ் ஆனந்தை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், சரவணனுக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து மாதம் ரூ. ஆயிரம் வீதம் 38 மாதங்களாக வந்த உதவித்தொகை ரூ.38 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து ரமேஷ் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் இதுபோல் வேறு யாரிடம் எல்லாம் மோசடி செய்துள்ளார்? எனவும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story