ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
ஆத்தூா ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் நகர பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இல்லை.
எனவே படுக்கைகள் வசதி கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாகவும், 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படும் வகையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தரவேண்டும் என மேலஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு அளித்தார்.
அவருடன் பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்கீர் முகைதீன் சென்றார்.
Related Tags :
Next Story