இடி-மின்னலுடன் 3 மணி நேரம் பலத்த மழை


இடி-மின்னலுடன் 3 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 21 Aug 2021 5:37 PM IST (Updated: 21 Aug 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் 3 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட கோதுமைமூட்டைகள் மழையில் நனைந்தன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் 3 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட கோதுமைமூட்டைகள் மழையில் நனைந்தன.

பலத்தமழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன்  பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை 6 மணி வரை பெய்து உள்ளது. பின்னர் காலை 9 மணி வரை மிதமாக நீடித்தது. தொடர்ந்து இந்த மழை சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. 
பலத்த மழையால் பள்ளமாக உள்ள பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. சில பகுதியில் சாலைகள் சேறும், சேகதியுமாக காணப்பட்டது. வயல் வெளிகளிலும் மழை நீர் நிரம்பியது. 

ேகாதுமை மூட்டைகள்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பொது வினியோகத்திற்காக சரக்கு ரெயிலில் கோதுமை மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவை சரக்குகள் இறக்கப்படும் இடத்தில் இறக்கி வைக்கப்பட்டு இருந்தன. 
நேற்று அதிகாலையில் இடைவிடாது பெய்த பலத்த மழையினால் கோதுமை மூட்டைகள் நனைந்தன. பின்னர் காலையில் கோதுமை மூட்டைகள் புதுமண்ணையில் அரசு குடோனிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக இறக்கப்பட்டது.

இதேபோல் வந்தவாசி மற்றும், மருதாடு சென்னாவரம், வழூர், பாதிரி, சளுக்கை, மருதாடு, அம்மையப்பட்டு, வெண்குன்றம், விழுதுபட்டு, மங்கநல்லூர் பிருதூர் ஆகிய கிராமங்களில் காலை 6.30 மணிமுதல் 9.30 மணி வரை 3 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பும் என்பதாலும் குடிநீர் ஆதாரம் பெருகும் என்பதாலும் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை அளவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக போளூரில் 97.6 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது. 
மற்ற பகுதியில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கலசபாக்கம்- 92, செங்கம்-75.6, தண்டராம்பட்டு- 35, கீழ்பென்னாத்தூர்- 22.6, ஜமுனாமரத்தூர் மற்றும் திருவண்ணாமலை- 21, சேத்தப்பட்டு- 3. 
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த மழை காரணமாக நேற்று முழுவதும வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Next Story