சாத்தான்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம்; ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


சாத்தான்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம்; ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 Aug 2021 7:59 PM IST (Updated: 21 Aug 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நெல் கொள்முதல் நிலையம்

சாத்தான்குளம் பகுதியில் நெல் விளைச்சலாகி அறுவடை நடந்து வருவதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
வட்டார காங்கிரஸ் தலைவர்கள் லூர்துமணி, சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, தி.மு.க. ஒன்றிய செயலளர் ஜோசப், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ராஜ்திலக் வரவேற்றார். அப்போது எம்.எல்.ஏ.விடம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து எம்.எல்.ஏ, நெல்கொள்முதல் நிலையத்தில் இருப்பு உள்ள நெல்மூட்டைகளை பார்வையிட்டார்.
பின்னர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, கூறுகையில், “இங்கு தனியார் கொள்முதல் செய்வதைவிட அதிக விலைக்கு நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு இதை விட கூடுதலாக விவசாயிகளுக்கு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில் பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

ஏரல் அருகே பண்ணைவிளை பள்ளிக்கூடம் அருகில் 2 மின் கம்பங்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலை அருகில் இருந்்தது. இதனால் வாகனங்கள் எதிரே வரும் வாகனத்துக்கு ஒதுங்கும்போது மின்கம்பத்தில் மோதும் நிலை இருந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மின் கம்பத்தில் விபத்துக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து அந்த மின் கம்பங்களை அகற்றி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இல்லாத அளவுக்கு சாலை ஓரத்தில் நட வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மின்சார துறை அதிகாரிகளிடம் பேசி மாற்றி அமைத்திட நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து இந்த 2 மின்கம்பங்களையும் மின்வாரிய ஊழியர்கள, அங்கிருந்து அகற்றி சாலையோரத்தில் அமைத்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க. வர்த்தக அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் சுந்தரராஜன், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் தேவசகாயம், பெருங்குளம் நகர காங்கிரஸ் தலைவர் மூக்காண்டி, மின்சார துறை அதிகாரி ரவிக்குமார், பெருங்குளம் பஞ்சாயத்து செயல் அலுவலர் காயத்ரி, கிராம நிர்வாக அதிகாரி ராமசாமி, பெருங்குளம் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story