மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
விளாத்திகுளம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்
விளாத்திகுளம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் காமராஜர் தெருவினை சேர்ந்தவர் பச்சக்காளை. இவருடைய மனைவி காசியம்மாள் (வயது 70). இந்த தம்பதிக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். விவசாயியான பச்சக்காளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 4 மகன்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். மற்ற 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் என எல்லோரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். புதூரில் காசியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். தன்னுடைய குழந்தைகள் எல்லோரும் நல்ல வசதியாக இருந்தும் கடைசிக்காலத்தில் தன்னை கவனிக்கவில்லை என்ற மனவேதனை காசியம்மாளுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
தீக்குளித்து தற்கொலை
இந்நிலையில் நேற்று காசியம்மாள் அவரது உறவினர் ஊரான விளாத்திகுளம் அயன்பொம்மையாபுரத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றார். அப்போது காசியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மனவேதனையில் இருந்த காசியம்மாள் வீட்டிற்கு சென்று மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் புதூர் போலீசார் விரைந்து சென்றனர். அவருடைய உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காசியம்மாள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story