தர்மபுரி மாவட்டம் முழுவதும் திடீர் மழை சாலைகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று திடீரென மழை பெய்தது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று திடீரென மழை பெய்தது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை
தர்மபுரி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் காலை 9 மணி வரை மாவட்டம் முழுவதும் திடீர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக தர்மபுரி-மொரப்பூர் சாலையில் உள்ள ஜடையம்பட்டி பகுதியில் புளிய மரம் சாய்ந்தது.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை பணியாளர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை அளவு
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- பாலக்கோடு-39, பாப்பிரெட்டிப்பட்டி-32.2, பென்னாகரம் மற்றும் அரூர் பகுதியில் தலா 7 மில்லி மீட்டரும், தர்மபுரி-4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 89.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Related Tags :
Next Story