குடும்ப தகராறில் மனைவி கோபித்து சென்றதால் நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் மனைவி கோபித்து சென்றதால் கொலை வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் மனைவி கோபித்து சென்றதால் கொலை வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நிதி நிறுவன உரிமையாளர்
கிருஷ்ணகிரி அருகே உள்ள கீழ்புதூரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 40). நிதி நிறுவன உரிமையாளர். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதனால் மனமுடைந்த சசிக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சசிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிதி நிறுவன உரிமையாளர் தற்ெகாலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட சசிக்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
----
Related Tags :
Next Story