மயிலாடும்பாறை சானரப்பன் மலையில் 11 கற்கருவிகளை பட்டை தீட்டும் பள்ளம் கண்டுபிடிப்பு


மயிலாடும்பாறை சானரப்பன் மலையில் 11 கற்கருவிகளை பட்டை தீட்டும் பள்ளம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2021 9:41 PM IST (Updated: 21 Aug 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே மயிலாடும்பாறை சானரப்பன் மலையில் 11 கற்கருவிகளை பட்டை தீட்டும் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பர்கூர்:
பர்கூர் அருகே மயிலாடும்பாறை சானரப்பன் மலையில் 11 கற்கருவிகளை பட்டை தீட்டும் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பட்டை தீட்டும் பள்ளம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறை சானரப்பன் மலையில், 11 கற்கருவிகளை பட்டை தீட்டும் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:-
மயிலாடும்பாறை சானரப்பன் மலையில் உள்ள நெகில் சுனையில், பாறை ஓவியங்கள் உள்ளன. மேலும் சுனையில் தண்ணீர் ஓடும் பாறையில், குரூஸ் (கற்கருவிகளை பட்டை தீட்டும் பள்ளம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2001-ல் இங்கு பட்டை தீட்டும் பள்ளம் ஒன்றை மட்டுமே கண்டுபிடித்தனர். தற்போது இங்கு அகழாய்வு செய்த பின்னர் 11 குரூஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 
ஆய்வு
இதனால் இப்பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த இடத்தைவிட்டு செல்லாமல், சிறிது சிறிதாக வெளியேறி உள்ளதால், குரூஸ் தவிர வேறு தடயங்கள் எதுவும் இல்லை. அந்த தடயங்களை தேடித்தான் அடுத்த கட்ட ஆய்வு சென்று கொண்டிருக்கிறது. 
தற்போது இந்த சுனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானை ஓடுகளை சுத்தம் செய்து அதில் எழுத்துக்கள் உள்ளனவா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில், தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன், கிருஷ்ணகிரி
வரலாற்று குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story