அதியமான்கோட்டையில் வலிமையான இந்தியா சுதந்திர தின ஓட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்


அதியமான்கோட்டையில் வலிமையான இந்தியா சுதந்திர தின ஓட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Aug 2021 9:41 PM IST (Updated: 21 Aug 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டையில் வலிமையான இந்தியா சுதந்திர தின ஓட்டத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தர்மபுரி:
அதியமான்கோட்டையில் வலிமையான இந்தியா சுதந்திர தின ஓட்டத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுதந்திர தின ஓட்டம்
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் இருந்து வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தின ஓட்டம் நடைபெற்றது. நேரு யுவ கேந்திரா மற்றும் தர்மபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் நடைபெற்ற இந்த ஓட்டத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தேசிய மாணவர் படையினர் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஓட்டமானது அதியமான்கோட்டத்தில் தொடங்கி எர்ரப்பட்டி, ஒட்டப்பட்டி, அரசு கலைக்கல்லூரி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
உறுதிமொழி
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைதொடர்ந்து ஓட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜேன் சுசிலா, பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மைய தேசிய நலப்பணிகள் அலுவலர் கோவிந்தராஜ், அரசு கலைக்கல்லூரி விளையாட்டுத்துறை இயக்குனர் பாலமுருகன், தர்மபுரி இந்திய வானொலி ஒலிபரப்பு தலைமை அலுவலர் முரளி, நேரு யுவ கேந்திரா உறுப்பினர் விஜயன், நேரு யுவ கேந்திரா கண்காணிப்பாளர் வேல்முருகன், தேசிய மாணவர் படை அரசு கல்லூரி அலுவலர் விஜயதேவன், ஜெயம் கல்லூரி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story