செஞ்சியில் அடுத்தடுத்து நடந்த சம்பவம்: பஸ் பயணிகளிடம் 6 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம மனிதர்கள் கைவரிசை
செஞ்சியில் பஸ் பயணிகளிடம் 6 பவுன் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செஞ்சி,
செஞ்சி அடுத்த திக்காமேடு கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் மனைவி பரிமளா (வயது 36). நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து திக்காமேடு செல்ல ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
அப்போது, செஞ்சி கூட்ரோடு அருகே செல்லும்போது, அவர் வைத்திருந்த மணிபர்சை காணவில்லை. அதில், 6 பவுன் நகைகள், ரூ 1,500 ெராக்கம் ஆகியன இருந்தது. பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம மனிதர் அவரது பர்சை திருடி சென்று விட்டார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல், மேலச்சேரியை சேர்ந்த ராமன் மனைவி லட்சுமி (55) என்பவர் செஞ்சி கூட்டுராடு அருகே இருந்து சென்னை செல்ல பஸ்சில் ஏற முயன்றார்.
அப்போது, அவரது பையை பிளேடால் கிழித்து , அதில் இருந்த 2 செல்போன்கள், ஒரு கிராம் தங்க கம்மல், ரூ.800 ஆகியவற்றை மர்ம மனிதர் திருடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பரிமளா, லட்சுமி ஆகியோர் செஞ்சி போலீசில் தனித்தனியே புகார் செய்தார்கள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story