காங்கேயம் முத்தூரில் 1368 பேருக்கு கொரோனா தடுப்பூசி
காங்கேயம், முத்தூரில் 1,368 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
காங்கேயம்
காங்கேயம், முத்தூரில் 1,368 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று காங்கேயம் ஒன்றியம், சாவடிப்பாளையம், செம்மங்குழிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 200 பேருக்கும், வரதப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 200 பேருக்கும், காங்கேயம் நகரம், பாரதியார் வீதியில் உள்ள அரசு பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 280 பேருக்கும் என மொத்தம் 680 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முத்தூர்
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மங்களப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி, ராசாத்தாவலசு, தென்னங்கரைப்பாளையம் அரசு நடுநிலை பள்ளிகளில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் முத்தூர் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மொத்தம் 438 பேருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டனர்.
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருதுறை அரசு நடுநிலைப்பள்ளியில் 250 பேருக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக போட்டனர். இதன்படி முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் நேற்று மொத்தம் 688 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 20ம் தேதி 151 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது, இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story